தவெக தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு!
07:51 AM Apr 05, 2025 IST
|
Ramamoorthy S
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அறிவிக்கப்பட்டபடி, 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
நாட்டில் உள்ள முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது. அண்மையில், தவெக தலைவரும், நடிகருமான விஜய்-க்கும் 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு 'Y' பிரிவு போலீசார் வருகை தந்துள்ளனர். 8 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையினர் சுழற்சி முறையில் விஜய்-க்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.
Advertisement
Advertisement