தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமனம்!
07:25 PM Jan 31, 2025 IST
|
Murugesan M
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிக்கொண்ட ஆதவ் அர்ஜூனா, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்து தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.
அதேபோல் அதிமுக ஐடி விங் இணை செயலாளராக இருந்த சிடிஆர்.நிர்மல் குமார், அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். இந்த நிலையில், ஆதவ் அர்ஜூனாவுக்கு தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
அதேபோல் நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Advertisement