தவெக மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக தவெக மாநாட்டுக்கு செல்லும் தொண்டர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட தவெக-வினர் சார்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக மாநாட்டிற்கு செல்லும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்க, காஞ்சிபுரம் மாவட்ட தவெக-வினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.கே.பி.தென்னரசு, தொழுப்பேட்டில் அமைந்துள்ள ஈஸ்வர் மஹாலில் உணவு தயாரிப்பு பணியினை தொடங்கி வைத்தார். 150-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் உணவு தயாரிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து தொண்டர்களுக்கு உணவு பாக்கெட் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே மாநாடு ஒரு மணி நேரம் முன்னதாக அதாவது பிற்பகல் 3 மணிக்கே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.