தவெக மாநாடு முடிந்து திரும்பிய தொண்டர்கள் - விழுப்புரம் - திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசல்!
தவெக மாநாடு முடிந்து அக்கட்சியின் தொண்டர்கள் ஒரே நேரத்தில் ஊர் திரும்பிய நிலையில், அணிவகுத்து நின்ற வாகனங்களால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நேற்று மாலை, தவெக முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் வருகை புரிந்தனர். மாநாடு முடிந்து தொண்டர்கள் ஒரே நேரத்தில் ஊர் திரும்பிய நிலையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
குறிப்பாக விழுப்புரத்தில் இருந்து திண்டிவனம் வரை சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து முடங்கியதால், பல்வேறு காரணங்களுக்காக அரசு பேருந்து மற்றும் கார்களில் சென்ற ஏராளமான பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.