தவெக 2-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு!
06:33 PM Jan 29, 2025 IST
|
Murugesan M
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.
Advertisement
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதிக்காக தமிழகத்திலுள்ள 234 தொகுதிகள், 120 அமைப்பு ரீதியான மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. அதற்கான பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகளை கட்சியின் தலைமை தொடங்கிய நிலையில், கடந்த 25-ம் தேதி 19 மாவட்ட செயலாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியல் வெளியானது.
இந்நிலையில், இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களுக்கு, தனது முகம் பதித்த வெள்ளி நாணயத்துடன், நியமன ஆணைகளை விஜய் வழங்கியுள்ளார்.
Advertisement
Advertisement