தாயின் பெயரில் மரம் வளர்க்கும் இயக்கத்தில் இணைந்த கயானா அதிபர் - பிரதமர் மோடி பெருமிதம்!
தாயின் பெயரில் ஒரு மரம் என்ற இயக்கத்தின் கீழ் பலர் மரம் வளர்க்க ஆர்வம் காட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Advertisement
ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளிலும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். மன் கி பாத்-தின் 116-வது அத்தியாயத்தில் மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, என்.சி.சி தினமான இன்று தனது பள்ளிப் பருவத்தை நினைவு கூர்வதாக தெரிவித்தார்.
என்.சி.சி மூலம் தமக்கு கிடைத்த அனுபவம் விலைமதிப்பற்றது என தெரிவித்த அவர், இளைஞர்களிடம் ஒழுக்கம், தலைமைத்துவம் போன்ற பண்புகளை என்.சி.சி வளர்ப்பதாக கூறினார்.
தாயின் பெயரில் ஒரு மரம்" என்ற இயக்கத்தின் கீழ் பலர் மரம் வளர்க்க ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தார். மேலும், கயானா சென்றபோது அதிபர் இர்பான் அலியும் இந்த இயக்கத்தில் இணைந்ததாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.