செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தாயும், மகனும் மர்ம மரணம்! - கொலையா என போலீஸ் விசாரணை!

11:12 AM Dec 16, 2024 IST | Murugesan M

வேலூர் அருகே தாயும், மகனும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்தவர்கள் நந்தகுமார் - நித்யஸ்ரீ தம்பதி.  இவர்களுக்கு 3 வயதில் மகன் ஒருவர் இருந்தார். தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், நித்யஸ்ரீயும், சிறுவனும் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த உறவினர்கள், உடல்களின் அருகே அமர்ந்திருந்த நந்தகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த நந்தகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தாயும், மகனும் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINMother and son mysterious death! - Police investigation as murder!tn police
Advertisement
Next Article