திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து - 10 பேர் காயம்!
03:55 PM Mar 14, 2025 IST
|
Ramamoorthy S
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
Advertisement
சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி தென்பசார் என்ற இடத்தில் வந்த போது சாலையில் இருந்த சைக்கிள் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளது.
இதனால் பின்னால் வந்துகொண்டிருந்த லாரி, அரசு பேருந்து, கார் என ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement