செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திண்டுக்கல் அருகே நீர் வழிப்பாதையை ஒன்றிணைந்து சீரமைத்த கிராம மக்கள்!

02:15 PM Dec 18, 2024 IST | Murugesan M

திண்டுக்கல் அருகே அதிகாரிகளை நம்பாமல் கிராம மக்களே ஒன்றிணைந்து குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

திண்டுக்கல் மாவட்டம் கோம்பை, புத்தூர், குருந்தம்பட்டி, பூசாரிபட்டி போன்ற மலைப்பகுதிகளில் பெய்த மழைநீர், வாய்க்கால் மூலம் அய்யலூரில் உள்ள துமுனி குளத்திற்கு செல்கிறது.

30 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் குளம் நிரம்பினால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயரும்.

Advertisement

இந்நிலையில், அய்யலூரில் உள்ள துமுனி குளத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில் நீர்வழிப் பாதையை சீரமைக்க கோரிக்கை விடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நம்பிக்கையை இழந்த அவர்கள், கெங்கையூர் அணைக்கட்டில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர்வழிப் பாதையை தாங்களாகவு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement
Tags :
MAINDindigulumuni Ayyalur.Tumuni pondKengaiyur dam
Advertisement
Next Article