திண்டுக்கல் : மின்தடையால் பாதியில் நிறுத்தப்பட்ட மாமன்ற கூட்டம்!
05:41 PM Mar 24, 2025 IST
|
Murugesan M
திண்டுக்கல் மாவட்டத்தில் 3 மாதங்களுக்குப் பின்னர் நடைபெற்ற மாமன்ற கூட்டமானது அடிக்கடி ஏற்பட்ட மின்தடையால் பாதியிலேயே முடிக்கப்பட்டது.
Advertisement
திண்டுக்கல் மாநகராட்சியின் 48வது வார்டு பகுதியில் 3 மாதங்களுக்குப் பின்பு மாமன்ற கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மாமன்ற உறுப்பினர்கள், தங்கள் பகுதியில் உள்ள நிறை, குறைகளை எடுத்துக் கூறினர். கூட்டத்திற்கு இடையே அடிக்கடி மின் தடை ஏற்பட்டதால் கூட்டத்தைப் பாதியிலேயே முடித்துவிட்டு அனைவரும் புறப்படத் தயாராகினர்.
Advertisement
அப்போது தங்கள் பகுதியில் உள்ள குறைகளைக் கேட்கவில்லை எனக்கூறி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கம் எழுப்பினர்.
Advertisement