For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திமுகவையும், தமிழக காவல்துறையையும் வன்மையாக கண்டித்த எச். ராஜா!

06:20 PM Dec 31, 2024 IST | Murugesan M
திமுகவையும்  தமிழக காவல்துறையையும் வன்மையாக கண்டித்த எச்  ராஜா

ஊழல் செய்தவர்களுக்கு திமுக அமைச்சரவையில் இடம், முகநூலில் கருத்து பதிவிடுபவர்களுக்கு சிறையில் இடம்,  இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இத குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Advertisement

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு உள்ளான திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு சல்யூட் அடித்து வரும் தமிழக காவல்துறை...

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திமுகவை சேர்ந்தவரால் பாலியல் வன்மொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க திமுக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற ஆதங்கத்தில் சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்ட கருத்துக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட வேலூர் கிராமிய காவல்நிலைய தலைமை காவலரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது.

Advertisement

தமிழகத்தில் நாள்தோறும் படுகொலைகள் நிகழ்ந்து வருவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசின் அவலங்கள் குறித்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்கள் கருத்தை பதிவிடுபவர்கள் மீதும், திமுகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் மீது வேதனையில் மண்வாரி தூற்றிய மூதாட்டி மீதும் வழக்கு பதிவு செய்து ஏழை, எளியவர்கள் மீது மட்டும் அடுக்குமுறையை பிரயோகிக்கும் தமிழக அரசையும், காவல்துறையையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஊழல் செய்தவர்களுக்கு திமுக அமைச்சரவையில் இடம்! முகநூலில் கருத்து பதிவிடுபவர்களுக்கு சிறையில் இடம்! தவறு செய்யும் அரசு ஊழியர்கள் திமுக ஆதரவாளர்களாக இருந்தால் அவர்களுக்கு தண்டனை பணியிட மாற்றம்! திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களுக்கு தண்டனை பணியிடை நீக்கம்! இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Tags :
Advertisement