திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சிவசேனா மாநில தலைவர் மணி பாரதி தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பழனியில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில தலைவர் மணிபாரதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
எனவே 2026-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தேசியம் வளரவும் பழனி முருகன் கோயிலில் பால்காவடி எடுத்து வேண்டி உள்ளதாக கூறினார்.