திமுக அரசு தொடர்ந்து ஆளுநரை அவமதிப்பது கண்டிக்கத்தக்கது - ஜான் பாண்டியன்
05:52 PM Jan 08, 2025 IST
|
Murugesan M
திமுக அரசு தொடர்ந்து ஆளுநரை அவமதிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Advertisement
நெல்லையில் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ஆளுநரை அவமதிக்க வேண்டும் என்பதே திமுகவின் எண்ணம் என தெரிவித்தார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது திமுக ஆளுநரை ஏன் எதிர்க்கவில்லை என்றும், ஆளுநரை அவமரியாதை செய்ய செய்ய அவரின் அதிகாரம் உயரும் என்றும் தெரிவித்தார். "அரசியல் நுணுக்கங்களை கற்றவர்கள் தான் ஆளுநராக நியமிக்கப்படுகிறார்கள் என்றும் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.
Advertisement
Advertisement