செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

07:41 PM Mar 19, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை என்றும் காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா?, திமுகவினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா? என்பது தெரியவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இன்று, ஈரோடு மாவட்டத்தில், பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

நேற்று திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை.

சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை. காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா அல்லது திமுகவினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை.

இது போன்ற அவல நிலையைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை. இந்தச் சூழ்நிலையிலும் அப்பா, தாத்தா என்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க அசிங்கமாக இல்லையா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Tags :
bjp k annamalaiDMKFEATUREDMAINMK StalinMurders have been happening every day since DMK came to power: Annamalai alleges!tn govt
Advertisement