திமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் : டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு!
11:41 AM Mar 27, 2025 IST
|
Murugesan M
திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisement
சென்னை எழும்பூரில் அமமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய டிடிவி தினகரன், சிறுபான்மை மக்களுக்கு எதிராக அனைத்து வகையிலும் திமுக அரசு செயல்படுவதாக விமர்சித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை நிலைநாட்ட அதிமுக ஒன்று சேருவதற்காக இறைவனை வேண்டிக் கொள்வதாகக் கூறினார்.
Advertisement
Advertisement