திமுக ஆட்சி அகற்றப்படும் வரை காலணி அணிய மாட்டேன் - அண்ணாமலை சபதம்!
திமுக ஆட்சி அகற்றப்படும் வரை காலணி அணியமாட்டேன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்மை கொடுமை தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தமிழக அரசு வெட்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
காவல்துறைக்கு FIR போடத் தெரியவில்லை என்றும், FIR-ஐ படிக்கும் போது ரத்தம் கொதிப்பதாகவும் அவர் கூறினார். அந்த FIR நீதிமன்றத்தில் ஒருபோதும் நிற்காது என்றும் அவர் தெரிவித்தார்.
நாளை காலை 10 மணிக்கு சாட்டையால் 6 முறை அடித்துக்கொள்வேன் என்றும் அவர் கூறினார். பாஜக தொண்டர்கள் அனைவரும் நாளை காலை 10 மணிக்கு வீட்டு வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர்கள் என்றும், நாளையில் இருந்து 48 நாட்களுக்கு விரதம் இருக்கப்போகப் போவதாகவும் அவர் கூறிளார்.
சமூக நீதி பற்றி பேச திமுக, காங்கிரசுக்கு அருகதை இல்லை என்றும், பட்டியல் இனத்தவரை துணை முதலமைச்சர் ஆக்கி இருக்கலாமே? என்றும் அவர் கூறினார்.
கிறிஸ்துமஸ் தினத்தில் தேவாலயம் செல்வதற்கு கூட திமுக முட்டுக்கட்டை போட்டதாகவும், தமிழகத்தில் தான் இரட்டைக் குவளை முறை புழக்கத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
சமூக நீதி குறித்து விவாதிக்க திமுகவினர் யாராவது வர முடியுமா? என்றும் அண்ணாமலை சவால் விடுத்தார்.