செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திமுக எம்எல்ஏ மனைவி மீது நில அபகரிப்பு வழக்கு : ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

07:20 PM Apr 05, 2025 IST | Murugesan M

திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி மீதான, நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான மனோ தங்கராஜின் மனைவி அஜிதா கன்னியாகுமரியில் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார்.

திமுக பிரமுகரான இவர் நாகர்கோவிலைச் சேர்ந்த ரியல் பண்ணைத்தோட்டம் அதிபர் தயா பாக்கிய சிங் என்பவரின் நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

நிலத்தைப் போலி ஆவணம் தயாரித்து சரவண பிரசாத் என்பவருக்கு விற்ற அஜித்தா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடைய அஜிதா மற்றும் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நாகர்கோவில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும்  திமுக பிரமுகர் அஜிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோமனோதங்கராஜின் மனைவி அஜிதாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து அவரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement
Tags :
சென்னை உயர் நீதிமன்றம்Land grabbing case against DMK MLA's wife: High Court refuses to quash it!
Advertisement
Next Article