திமுக எம்பி கதிர் ஆனந்திடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை!
வேலூர் திமுக எம்பி கதிர் ஆனந்திடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
Advertisement
கடந்த 2019ம் ஆண்டில் அமைச்சர் துரைமுருகன் மகனும், எம்.பி.யுமான கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் சுமார் 14 கோடி ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து கடந்த 3-ம் தேதியும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று நாட்கள் தொடர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத பணமும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் விசாரணைக்காக சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் நேரில் ஆஜரானார். அவரிடம்10 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அடுக்கடுக்கான கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.