செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் அட்டூழியம் : 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

04:15 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சென்னை ஈசிஆர் அருகே திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் சிலர், பெண்களை துரத்திச் சென்று அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதில், கடந்த 25-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் சிலர், மது போதையில் தங்களை தகாத வார்த்தைகள் பேசி வம்புக்கு இழுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், தாங்கள் அங்கிருந்து கிளம்பியபோது, தங்களை பின்தொடர்ந்து காரில் துரத்தி அந்த இளைஞர்கள் தொல்லை கொடுத்ததாகவும் அந்த பெண், புகாரில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இச்சம்பவம் குறித்து, வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு சென்றும், குற்றவாளிகளின் அடையாளங்களை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement
Tags :
Atrocity by youths who came in a car with DMK flag: Case registered under 4 sectionsDMKFEATUREDMAIN
Advertisement