செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

07:35 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்து இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியில்,

அரிட்டாபட்டி பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை தமிழகம் வர இருப்பதாகவும், அவரோடு தானும் இணைந்து மக்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதால் தான் திட்டம் ரத்து செய்யப்பட்டது எனக் கூறும் முதலமைச்சர், இதற்கு முன்னால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன ஆனது என சொல்ல வேண்டும் எனக்கூறினார்.

இ சி ஆர் சாலையில் பெண்களை திமுக கொடியுடன் கூடிய காரில் வந்தவர்கள் மிரட்டிய காட்சிகள் பதபதப்பை ஏற்படுத்துவதாகவும், தமிழகத்தில் பகல், இரவு மட்டுமல்ல எந்த நேரத்திலுமே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தான் நிலவுகிறது எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் காவல்நிலையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் காவல்துறை ரோந்து வாகன எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க திமுக அரசு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை எனத் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் செய்தியாளர்களின் தொலைபேசியை வாங்கி அதனை சோதனை செய்வதும், அவர்களிடம் தேவையற்ற கேள்விகளை கேட்பதும் முட்டாள் தனமானது என அண்ணாமலை தெரிவித்தார்.

மதுரை அரிட்டாபட்டியில் 92 அரசுப்பேருந்துகளில் மக்களுக்கு 300 ரூபாய் கொடுத்து நடத்துவது தான் பாராட்டு விழாவா? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, திமுக எக்காலத்திற்கும் ஆட்சிக்கு வராது என்பதற்கு இது தான் சரியான உதாரணம் என்பதோடு, ஏழாவது முறையாக திமுக ஆட்சி என முதலவர் பகல் கனவு காண்கிறார் எனத் தெரிவித்தார்.

Advertisement
Tags :
DMKtn bjptamil janam tvAnnamalai condemnedtn govttn bjp chief annamalaiMAIN
Advertisement