செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் : துண்டிக்கப்பட்ட மின்சாரம்!

02:38 PM Apr 06, 2025 IST | Murugesan M

திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் எனத் திண்டுக்கல் லியோனி பேசிக்கொண்டிருந்த போது சங்கு ஊதப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் வேலூர் அருகே அரங்கேறியது.

Advertisement

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டார்.

முன்னதாக மழை குறுக்கிட்டதால் ஒருமணி நேரம் தாமதமாகப் பொதுக்கூட்டம் தொடங்கியது. இதில் பேசிய திண்டுக்கல் லியோனி, திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் எனக் கூறினார்.

Advertisement

அப்போது பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து சங்கு ஊதப்பட்டது. அதைத்தொடர்ந்து மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Tags :
DMK will come back to power: Power cut!MAINதிண்டுக்கல் லியோனி
Advertisement
Next Article