செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திம்மம்மா மரிமானு : உலகின் மிகப்பெரிய அதிசய ஆலமரம் - சிறப்பு தொகுப்பு!

08:00 PM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

ஆந்திராவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், மிகப் பழமையான அதே சமயம் அதிசயமான பெரிய ஆலமரம் உள்ளது. திம்மம்மா மரிமானு என்று அழைக்கப்படும் இந்த மரம், உலகின் மிகப்பெரிய ஆலமரம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

தெலுங்கு மொழியில் 'மர்ரி' என்றால் ஆலமரம் என்றும், 'மனு' என்றால் மரம் என்றும் பொருள். திம்மம்மா மரிமானு என்பது வரலாற்று சிறப்புமிக்க ஆல மரமாகும். ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் கதிரி நகரத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலமரம் உள்ளது.

இந்த ஆலமரம், சுமார் 19,107 சதுர மீட்டர் பரப்பளவில் நிமிர்ந்து நிற்கிறது. இந்த மரத்தின் நிழலில் 20,000க்கும் அதிகமானோர் தங்கி இளைப்பாற முடியும்.

Advertisement

550 ஆண்டுகள் பழமையான இந்த ஆல மரத்தின் கிளைகளும், விழுதுகளும், 5 ஏக்கர் வரை நிலப்பரப்பில் பரவி உள்ளன. இந்த ஆலமரத்தடியில், இரண்டுக்கு மேற்பட்ட கால்பந்து மைதானங்கள் அமைக்க முடியும்.

இதன் காரணமாகவே,1989ஆம் ஆண்டில் திம்மம்மா மரிமானு ஆலமரம், உலகின் மிகப் பெரிய மரம் என்ற கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுள்ளது.

திம்மம்மா ஆலமரத்தின் வலுவான வேர்கள் மண் அரிப்பைத் தடுக்க உதவுகின்றன. பறவைகள், வௌவால்கள், பூச்சிகள் மற்றும் சிறிய பாலூட்டிகள் மற்றும் விலங்குகள் வாழவும் உணவைக் கண்டுபிடிக்கவும் பெரிய கிளைகள் இடமளிக்கின்றன. சுற்றுவட்டார வனவிலங்கு சமூகத்தின் இன்றியமையாத புகலிடமாக இந்த ஆலமரம் விளங்குகிறது.

பழங்காலத்திலிருந்தே உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும், இந்த ஆலமரத்தைத் தெய்வமாகவே பார்க்கின்றனர். இந்த ஆல மரத்தின் வரலாறு கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

15 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த திம்மம்மா என்ற பெண், தனது கணவரின் ஈமச் சடங்கில், உடன்கட்டை ஏறி தனது உயிரைத் தியாகம் செய்தாள். திம்மம்மா சிதை நெருப்பில், ஏறிய அதே இடத்தில் இந்த ஆலமரம் துளிர்விட்டதாக நம்பப்படுகிறது.

இந்த ஆலமரத்தில், திம்மம்மா இருப்பதாக கிராம மக்கள் நம்புகின்றனர். எனவே தான், இந்த மரம், திம்மம்மா மாரிமானு என வழங்கப்படுகிறது. திம்மம்மா மாரிமனு மரத்தின் கீழ் ஒரு சிறிய கோயில் கட்டப்பட்டுள்ளது.தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட திம்மம்மா வாழ்க்கை வரலாறு, கோயில் சன்னதியில் வைக்கப்பட்டுள்ளது.

குழந்தை இல்லாத தம்பதிகள் திம்மம்மாவை வந்து வணங்கினால், அடுத்த ஆண்டு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படும் தலமாகவும் இந்த ஆலமரம் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகா சிவராத்திரிக்கு வந்து வழிபடுகின்றனர்.

திம்மம்மா ஆலமரம், சுற்றுசூழலின் பாதுகாவலாகவும், ஆன்மீகத்தின் அடையாளமாகவும் உள்ளது.

Advertisement
Tags :
world's largest tree.MAINAndhra Pradeshlarge banyan treeThimmamma MarimanuKadiriAnantapur districtGuinness World Records
Advertisement