திராவிட சிந்தனையாளர்களால் கொல்லப்படலாம் - இயக்குநர் கோபி நயினார் அச்சம்!
08:59 AM Mar 21, 2025 IST
|
Ramamoorthy S
திராவிட சிந்தனையாளர்களால் பெரியளவில் அவமதிக்கப்படும் தாம், எதிர்காலத்தில் அவர்களால் கொல்லப்படலாம் என இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
Advertisement
பட்டியல் சமூக மக்களுக்கு ஆதரவாக போராடியதால் திராவிட சிந்தனையாளர்கள் தன்னை இழிவுபடுத்துவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திராவிட சிந்தனையாளர்களால் அவமானத்திற்கு உள்ளாகும் தான், எப்போது வேண்டுமானாலும் அவர்களால் கொல்லப்படலாம் என தெரிவித்துள்ளார்.
சர்வாதிகார மனநிலை கொண்டவர்கள் மத்தியில் வாழ்வதற்கே அச்சமாக உள்ளதாக பதிவிட்டுள்ள அவர், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் ஜனநாயக சிந்தனையோடு கேள்விகளை எழுப்புவது திராவிட சிந்தனையாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
மேலும், திராவிடர் கழகம் தனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கப் போவதாகவும் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
Advertisement