செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திராவிட மாடல் ஆட்சியில் நாளும் ஒரு பயங்கரம் : எச். ராஜா குற்றச்சாட்டு!

01:29 PM Feb 25, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

திமுக அரசு அரியணை ஏறியது முதல், எங்கே எப்போது யார் யாரை வெட்டுவார்கள், குடிபோதையில் யாரைக் குத்துவார்கள், குழந்தைகள் பத்திரமாக வீடு திரும்புமோ என்ற பதற்றத்திலேயே தான் நமக்கு ஒவ்வொரு நாளும் விடிகிறது என பாஜக மூத்த தலைவர்  எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இந்த திமுக அரசு அரியணை ஏறியது முதல், எங்கே எப்போது யார் யாரை வெட்டுவார்கள், குடிபோதையில் யாரைக் குத்துவார்கள், சேமித்து வைத்தப் பணத்தை யாராவது கொள்ளையடித்து விடுவார்களா, பள்ளிக்கு சென்ற நமது பிள்ளை பத்திரமாக வீடு திரும்புமோ என்ற பதற்றத்திலேயே தான் நமக்கு ஒவ்வொரு நாளும் விடிகிறது என எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

மேலும், தினந்தோறும் தமிழகத்தில் அரங்கேறும் பெண்களுக்கெதிரான கொடுமைகளைப் பார்க்கையில், வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்தால் மட்டும் தான் அவர்களைப் பாதுகாக்க முடியும் என்ற அவலநிலைக்கு நாம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது தமிழக முதல்வர் ஸ்டாலினின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வியே அன்றி வேறில்லை என எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

இவ்வாறு, ஆளத் தெரியாமல் வாரிசு அடிப்படையில் பதவி வாங்குபவர்களின் கையில் சிக்கும் ஒரு மாநிலத்தின் நிலை என்னவாகும் என்பதற்கு தமிழகமும் அதை ஆளும் அறிவாலயமும் நமக்கு கண்கூடான சான்று என எச். ராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
bjp h rajaDMKEvery day is a nightmare in the Dravidian model regime: H. Raja alleges!h rajaMAINMK Stalin
Advertisement