செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திராவிட மாடல் ஆட்சி : வன்முறை குற்றங்களின் முகவரி - ஹெச்.ராஜா விமர்சனம்!

06:00 PM Nov 13, 2024 IST | Murugesan M

மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவர்களுக்கே உரிய பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றால், மக்களின் உயிர்களுக்கு என்ன உத்தரவாதம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணிபுரியும் அரசு மருத்துவரை சிலர் கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இந்த திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தறிகெட்டு, தமிழக மக்கள் உயிர்பயத்தில் தங்களின் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு நாளுக்கொரு சான்று நமக்கு கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறது.

Advertisement

தமிழக முதல்வர் ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சியில், பணியில் இருக்கும் ஒரு அரசு மருத்துவருக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் பாதுகாப்பை நினைக்கையில் அச்சம் படர்கிறது. குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதாக வாய்ச்சவடால் விட்ட சர்வாதிகாரி ஸ்டாலின் அவர்களின் இரும்புக் கரங்கள் துருப்பிடித்து விட்டதா?

மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவர்களுக்கே உரிய பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றால், மக்களின் உயிர்களுக்கு என்ன உத்தரவாதம்? எனவே, எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று வெற்று விளம்பரம் செய்வதை நிறுத்திவிட்டு, வன்முறைக் குற்றங்களை அடக்குவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
bjpChennaidoctor attackedFEATUREDh rajaMAIN
Advertisement
Next Article