செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருக்குறள் மொழிபெயர்ப்பு - கல்வித்துறை அதிகாரிகள் தகவல்!

03:01 PM Nov 22, 2024 IST | Murugesan M

இந்தியாவில் அரிய மொழி பேசுபவர்களும் படிக்கும் வகையில் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்யவுள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

சென்னை​யில் உள்ள செம்​மொழி தமிழாய்வு மத்திய நிறு​வனம் திருக்குறளை மொழிபெயர்த்து வருவதாக மத்திய கல்வித் துறை அமைச்சக அதிகாரிகள் தகவலளித்துள்ளனர். நீலகிரி மாவட்ட பழங்​குடிகளின் 6 மொழிகளி​லும் திருக்​குறள் வெளி​யாகவுள்ள நிலையில், இந்தியாவின் 20 அரிய மொழிகளில் வெளி​யாகும் முதல் மொழிபெயர்ப்பு நூலாக திருக்​குறள் அமைந்துள்ளது.

மேலும், செம்​மொழி தமிழாய்வு மத்திய நிறு​வனத்தின் அரிய மொழிகளின் ​திருக்​குறள் நூல்​களை​ பிரதமர் மோடி வெளி​யிடு​வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement
Tags :
MAINMinistry of EducationThirukkuralThirukkural translate
Advertisement
Next Article