செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற விமானம் - தண்ணீர் பீய்ச்சியடித்து உற்சாக வரவேற்பு!

01:28 PM Mar 31, 2025 IST | Ramamoorthy S

 திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சியடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு 2019ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் விமானம் நிலையம் திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டன.

கொரோனாவுக்கு பிறகு சென்னை - யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவை அதிகரித்த நிலையில், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் விமான சேவைகளை தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

அதன் ஒரு பகுதியாக, திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை தற்போது தொடங்கியுள்ளது. யாழ்ப்பாணம் சென்ற இண்டிகோ விமானத்தின் மீது தண்ணீர் பீய்ச்சிடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், விமான நிலையம் வந்த பயணிகளை அதிகாரிகள் வரவேற்றனர்.

Advertisement
Tags :
FEATUREDjaffna AirportMAINTrichy Jaffna flightwelcome spray for flight
Advertisement
Next Article