திருச்சியில் ஜனவரி 10-இல் தனியார் பள்ளிகள் சங்க ஆலோசனை கூட்டம்!
02:15 PM Jan 04, 2025 IST | Murugesan M
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் வரும் 10ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது.
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக புகார் எழுந்தது.
Advertisement
இந்நிலையில், தனியார் பள்ளிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ஜனவரி 10ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ளது. இதில் தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பராக்கப்படுகிறது.
மேலும், தனியார் பள்ளிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க உயர்மட்ட குழு அமைக்கவும் தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. குழந்தைகளுக்கு சிறு பாதிப்பு கூட ஏற்படாத வகையில் அவர்களை பள்ளி நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
Advertisement