திருச்சி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பு!
10:51 AM Dec 28, 2024 IST | Murugesan M
திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு பிடிபட்டது.
புத்தாநத்தம் பகுதியில் வெகு நாட்களாக மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் பாம்பை பிடிக்க பலமுறை முயற்சித்தும் முடியாமல் போனது.
Advertisement
இந்த நிலையில், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மலைப் பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.
Advertisement
Advertisement