மின் மயானத்தில் ரூ.500 வசூல், ரூ.300க்கும் மட்டும் ரசீது தரப்படுவதாக குற்றச்சாட்டு!
02:25 PM Apr 03, 2025 IST
|
Ramamoorthy S
திருச்சியில் மின் மயான மேடையில் தகனம் செய்வதற்கு 500 ரூபாய் வசூலித்துவிட்டு, 300 ரூபாய்க்கு மட்டும் ரசீது தந்து ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Advertisement
திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள ஆத்தூர் சாலையில் மின் மயான மேடை அமைந்துள்ளது. இங்கு இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய குடும்பத்தாரிடம் இருந்து 500 ரூபாய் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர்களுக்கு 300 ரூபாய்க்கான ரசீது மட்டுமே வழங்கப்படுவதாகவும், பாக்கி 200 ரூபாய் குறித்து முறையான பதில் அளிக்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Advertisement
நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விருத்துள்ளனர்.
Advertisement