செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்படும்! - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்

11:37 AM Jan 06, 2025 IST | Murugesan M

பொது மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு தீர்வு காணப்படும்  என புதிதாக பொறுப்பேற்ற திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

Advertisement

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர்,

Advertisement

திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடர்பாடும் இல்லாமல், சட்டம் ஒழுங்கை நல்லமுறையில் பேணிகாக்கப்படும் எனவும், ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் சொத்து தொடர்பான வழக்குகளில் விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், மேற்கொண்டு எவ்வித குற்றங்களும் நடைபெறாமல் இருக்கவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

பொது மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு தீர்வு காணப்படும் எனவும், அவர்களுடன் காவல்துறையினர் நல்லுறவு மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

காவல் துறையினரின் குறைகளை கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றி, நல்லமுறையில் எவ்வித மனசோர்வு இல்லாமல் பணியாற்ற வழிவகை செய்யப்படும். காவல் நிலையங்களில் திறன்பாடு மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Law and order will be maintained in Trichy district! - District Superintendent of PoliceMAINSelvanagaratnamtrchy sptrichy
Advertisement
Next Article