செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் - சூரனை வதம் செய்த ஜெயந்திநாதர்!

06:25 PM Nov 07, 2024 IST | Murugesan M

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.

Advertisement

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் கந்தசஷ்டி கடந்த 2-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொங்கியது. சூரசம்ஹாரத்தையொட்டி, சுவாமி ஜெயந்திநாதருக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து கடற்கரையில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர் யானை முகம் கொண்ட தாரகாசூரனை வேலால் வதம் செய்தார்.

தொடர்ந்து சிங்க முகம் கொண்ட சூரபத்மனை சுவாமி வதம் செய்தார். அப்போது பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனர்.

Advertisement

பின்னர், தன் முகம் கொண்ட சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வேலால் வதம் செய்தார்.தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் வந்த சூரபத்மனை வேலால் வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி சுவாமி ஜெயந்திநாதர் ஆட்கொண்டார்.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நாளை இரவு 11 மணிக்குமேல் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் திருக்கோயில் வளாக மேல கோபுரம் முன்பு உள்ள மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது.

இதேபோல் தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement
Tags :
SurasamharamKanthashastiFEATUREDMAINtiruchendurTiruchendur Subramania Swamy Temple.
Advertisement
Next Article