செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருச்செந்தூர் கோயிலில் 6 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் - அலட்சியமாக பதிலளித்த அமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்!

01:26 PM Jan 19, 2025 IST | Sivasubramanian P

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள்  6 மணி நேரம் காத்திருந்த விவகாரத்தில்  அலட்சியமாக பதிலளித்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : 'நேற்றைய தினம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பக்தர்களை, உணவு, தண்ணீர் இன்றி, அடைத்து வைத்திருக்கின்றார்கள்.

இது குறித்து பக்தர்கள் புகார் தெரிவித்தபோது, “திருப்பதி கோவிலில் மட்டும் 24 மணி நேரம் நிற்பான்” என்று ஒருமையில் அலட்சியமாகப் பதில் அளித்திருக்கிறார் அமைச்சர் திரு சேகர்பாபு.

Advertisement

திருப்பதி கோவிலில் பொதுமக்களுக்கு உணவு, தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட போதிய வசதிகள் செய்திருக்கிறார்கள். உங்களைப் போல, கோவில் உண்டியல் பணத்தை முறைகேடாகச் செலவழிப்பதில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் நேர்மையான உழைப்பில் கிடைக்கும் பணத்தில் சிறு பகுதியை, கோவில்களுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.

உங்களைப் போல, கோவில் பிரசாதத்தில் கமிஷன் அடிப்பதில்லை. கோபாலபுரம் குடும்பத்திற்கு நெருக்கம் என்ற ஆணவத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. இதை விட அதிகார மமதையில் ஆடியவர்களுக்கெல்லாம், காலம் பாடம் புகட்டியிருக்கிறது என்பதை அமைச்சருக்கு நினைவுபடுத்துகிறேன்" என அண்ணமாலை தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
annamalaiFEATUREDMAINminister sakerbabuTamil Nadu BJP State President Annamalaitiruchendur templeTiruchendur temple devotees waiting issue
Advertisement
Next Article