செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

02:56 PM Nov 24, 2024 IST | Murugesan M

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் யானை தெய்வானையை கண்காணித்து அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்த பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Advertisement

கடந்த 18-ம் தேதியன்று யானை தெய்வானையால் தாக்கப்பட்டு பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் தலா 2 லட்சம் நிவாரண நிதி அறிவித்தார்.

இந்த நிலையில், அமைச்சர் சேகர்பாபு யானை தெய்வானையை பார்வையிட்டார். இதனைதொடர்ந்து பேட்டியளித்த அவர், 5 துறை சார்ந்த அதிகாரிகள் குழு யானையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் அறிக்கை அளித்த பின் ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
elephant deivanai monitorMAINMinister SekarbabuTiruchendur Subramaniaswamy Temple.
Advertisement
Next Article