செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருடாபிஷேகம் கடும் போக்குவரது நெரிசல்!

10:45 AM Jan 19, 2025 IST | Sivasubramanian P

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருடாபிஷேகம் இன்று நடைபெறுவதையொட்டி பக்தர்களின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவரான சுப்பிரமணியர் தை உத்திர நட்சத்திர தினத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

எனவே, ஆண்டுதோறும் தை மாதம் உத்திர நட்சத்திரத்தன்று இக்கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தை உத்திர வருடாபிஷேகம் விழா இன்று நடைபெறுகிறது.

Advertisement

இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.இதனால் திருச்செந்தூர் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில்   சுமார் 15 நிமிடங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சிக்கியது.

எனவே றநகர் பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Tags :
MAINthai udira varutabiskeamTiruchendur Subramanya Swamy Templetraffic jam
Advertisement
Next Article