திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடல் அரிப்பு குறித்து தொடர்ந்து 2-வது நாளாக ஆய்வு!
03:46 PM Jan 23, 2025 IST | Murugesan M
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு குறித்து தேசிய கடலோர ஆராய்ச்சி குழுவினர் 2-வது நாளாக நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கடந்த சில தினங்களுக்கு முன் கடல் அரிப்பு ஏற்பட்டது.
Advertisement
இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு கருதி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் கடற்கரை ஆராய்ச்சி குழுவினர் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.
RTK GPS கருவி மற்றும் ட்ரோன் கேமரா மூலம் புவியின் நிலத்தன்மையை உறுதி செய்வதற்கான ஆய்வில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement