செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம்!

04:45 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தை அமாவாசையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு, இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

அதிகாலை 5 மணி 30 நிமிடத்திற்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, சண்முக விலாஸ் மண்டத்தில் அஸ்திர தேவருக்கு, பால், பழம், மஞ்சள் மற்றும் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

அஸ்திர தேவர் மேள தாளங்களுடன் கடலுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர், சண்முக விலாஸ் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்த அஸ்திர தேவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement
Tags :
MAINSpecial Abhishekam for Astra Devar in Tiruchendur Subramania Swamy Temple!Tiruchendur Subramania Swamy Temple.
Advertisement