திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்ட வளாக பணி : வரைபட தயாரிப்பிற்கு ரூ.8 கோடி - ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்!
02:07 PM Mar 26, 2025 IST
|
Murugesan M
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் வரைபட தயாரிப்பிற்கு மட்டும் தனியார் நிறுவனத்திற்கு எட்டு கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில், 300 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாக பணி நடைபெற்று வருகிறது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தொடங்கிய பணிகள் தற்போது 90 சதவீதம் வரை நிறைவு பெற்றுளது.
Advertisement
பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த பின் ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், பெருந்திட்ட வளாகப் பணிகள் அமைப்பதற்கான வரைபட தயாரிப்பிற்கு மட்டும் தனியார் நிறுவனத்திற்கு எட்டு கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
Advertisement