திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம் -திரளான பக்தர்கள் பங்கேற்பு!
06:45 PM Mar 23, 2025 IST
|
Ramamoorthy S
சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் நடைபெற்ற ரங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாரால் பாடல் பெற்ற திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் நான்கு கோலங்களில் பெருமாள் காட்சி அளிக்கிறார்.
சிறப்பு வாய்ந்த இந்த தலத்தில் நடந்து வந்த பங்குனி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் எழுந்தருள, நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கத்துடன் திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
Advertisement
Advertisement