திருப்பதி ஏழுமலையான் கோயில் மார்ச் மாத சிறப்பு தரிசனம் - முன்பதிவு தேதி மாற்றம்!
12:30 PM Dec 21, 2024 IST | Murugesan M
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதத்திற்கான சிறப்பு தரிசன முன்பதிவு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் மாதத்திற்கான ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் டிசம்பர் 25ம் தேதி காலை 11 மணிக்கும், மார்ச் மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் டிசம்பர் 26ம் தேதி காலை 11 மணிக்கும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அடுத்த மாதத்திற்கான வைகுண்ட துவார சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் டிசம்பர் 24ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு தேவஸ்தானத்தின் இணையதளத்தில் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement