திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறுவன் உயிரிழப்பு!
11:56 AM Feb 26, 2025 IST
|
Murugesan M
திருப்பதி மலையில் உள்ள இலவச உணவு கூடத்தில் ஓடியபோது கால் தவறி விழுந்து பாடுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Advertisement
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நாக ரத்தினம்மா - மல்லேஸ் தம்பதியர், தங்களது 15 வயது மகன் மஞ்சுநாத்துடன் திருப்பதி மலைக்கு சென்றனர். ஏழுமலையானை வழிபட்ட பிறகு சிறுவன் மஞ்சுநாத் உணவு உண்பதற்காக இலவச உணவு கூடத்திற்கு ஓடிச் சென்றுள்ளார்.
அப்போது கால் தவறி கீழே விழுந்து சுய நினைவை இழந்தார். சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்றுவந்த மஞ்சுநாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Advertisement
Advertisement