திருப்பதி திருமலை! : விநாயகர் கோயில் உண்டியல் திருட்டு
திருப்பதி திருமலையில் உள்ள விநாயகர் கோயிலில் உண்டியல் காணிக்கை பணத்தை திருடித் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் பாலாஜி நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த உண்டியலை தூக்கிச் சென்று, அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் வைத்து உடைத்து அதிலிருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றுள்ளதாகவும், உண்டியல் காலியாக இருக்க கூடாது என்பதற்காக சில்லரை காசுகளை போட்டுவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஏழுமலையானுக்கு பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்திய 100 கிராம் தங்க பிஸ்கட்டை திருடிய ஒப்பந்த ஊழியர் பென்சுலையா என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த தங்க பிஸ்கட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.