செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருப்பத்தூரில் சமத்துவப் பொங்கல் விழா கோலாகலம்!

10:24 AM Jan 10, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், சமத்துவப் பொங்கல் வைத்து கல்லூரி மாணவ மாணவிகளுடன் வெளிநாட்டவரும் குதூகலமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

Advertisement

திருப்பத்தூர் நகரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், சமத்துவ பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வந்த வெளிநாட்டினருக்கு கல்லூரி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் குடிசைகள், வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பழங்கால பொருட்கள், கிளி ஜோசியம் போன்றவற்றை காட்சி படுத்தியிருந்தனர். இயற்கை குடிலில் வெளிநாட்டவர் பொங்கல் வைத்து வழிபட்டு "பொங்கலோ பொங்கல்" என்று கூறி மகிழ்ந்தனர்.

Advertisement

இதனை தொடர்ந்து சிலம்பாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம், கருப்பசாமி ஆட்டம் மற்றும் மாணவ மாணவிகளின் பல்வேறு ஆடல் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளை அவர்கள் ஆர்வத்தோடு கண்டு மகிழ்ந்தனர்.

Advertisement
Tags :
foreigners celebratie pongalMAINPongal festivalSamathuva Pongal festivalTirupattur.
Advertisement