திருப்பத்தூரில் திமுக நகர்மன்ற தலைவரை எதிர்த்து திமுக கவுன்சிலர்களே வெளிநடப்பு!
07:23 PM Mar 20, 2025 IST
|
Murugesan M
திருப்பத்தூரில் திமுக நகர்மன்ற தலைவரை எதிர்த்து திமுக உறுப்பினர்களே வெளிநடப்பு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
Advertisement
திருப்பத்தூர் நகராட்சி தலைவர் சங்கீதா தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 27 திமுக கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனக்கூறி வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து சமாதானம் ஏற்பட்டு மீண்டும் நகராட்சி கூட்டத்திற்கு வருகை தந்த திமுக கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர் சங்கீதாவிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.
Advertisement
Advertisement