திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் அவதியடைந்தனர்.
வெலக்கல் நத்தம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
ஆனால் முறையான சாலை வசதி இல்லாததால் கடும் சிரமத்தை அவர்கள் சந்தித்து வருகின்றனர். எனவே, சாலை வசதி அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.