திருப்பத்தூர் : பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வேதனை!
02:20 PM Mar 15, 2025 IST
|
Murugesan M
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் சிரமத்திற்கு ஆளாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Advertisement
நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதி வழியாக நாள்தோறும் ஏராளமான அரசு பேருந்துகள் சென்று வருகின்றன. பச்சூர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், அந்த பகுதியில் உள்ள வீட்டு வாசலில் அமர்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நிழற்குடை இல்லாததால் வெயில் தாக்கத்தால் நாள்தோறும் சிரமத்திற்கு ஆளாவதாக கூறும் பச்சூர் மக்கள், நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement