செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்!

02:05 PM Dec 05, 2024 IST | Murugesan M

மதுரை திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement

திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது.  பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால் சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.

Advertisement

அங்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை முன்னிலையில் தர்பை புல், மாவிலை கொண்டு அலங்கரிக்கப்பட்ட கொடிகம்பத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில், வெள்ளி பூதவாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 12ஆம் தேதி சுப்ரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் . தொடர்ந்து 13 ஆம் தேதி காலையில் கார்த்திகை தேரோட்டமும், மாலையில் கோயிலில் பால தீபம் ஏற்றப்பட்டு மலைமேல் மகாதீபம் ஏற்றப்படும்.

Advertisement
Tags :
FEATUREDMAINMaduraiSubramania Swamy TempleKarthigai Deepam festivalThiruparankundram
Advertisement
Next Article