திருப்பரங்குன்றம் மலையில் ஆடு,கோழிகளை பழியிட இஸ்லாமிய அமைப்பினர் முயற்சி - இந்து முன்னணி குற்றச்சாட்டு!
இந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலையை இஸ்லாமிய அமைப்பினர் சிக்கந்தர் மலை என கூறி ஆடு, கோழிகளை பலியிட முயற்சிப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisement
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது நீதிமன்ற உத்தரவுபடி தீபம் ஏற்றப் போவதாக இந்து முன்னணி கட்சியினர் அறிவித்திருந்தனர். அந்த வகையில் கையில் வேல் ஏந்திய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், 500-க்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் மயில் மண்டபத்தில் இருந்து மலையை நோக்கி பேரணியாக சென்றனர்.
தொடர்ந்து மலை மேல் தீபம் ஏற்ற காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வரா சுப்பிரமணியம், திருப்பரங்குன்றம் மலையை இஸ்லாமிய அமைப்பினர் சிக்கந்தர் மலை என கூறி ஆடு, கோழிகளை பலியிட முயற்சிப்பதாக தெரிவித்தார். மேலும் ஆட்சி புரியும் இந்து விரோத அரசே இதற்கு காரணமென அவர் குற்றம் சாட்டினார்.