திருப்பரங்குன்றம் மலையை காக்க இந்து முன்னணி போராட்டம்!
11:31 AM Jan 29, 2025 IST
|
Murugesan M
திருப்பரங்குன்றம் மலையை காக்க, வரும் 4ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு, உடன்குடியில் தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்தனர்.
Advertisement
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்து வரும் 4-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியினர் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
Advertisement
இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு, உடன்குடியில் இந்து முன்னணியினர் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்தும் துண்டுபிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
Advertisement