திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முதல்வர் மௌனம் காப்பது ஏன்? - இந்து மக்கள் கட்சி கேள்வி!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன்? எனஇந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி அளித்த அவர், திருப்பரங்குன்ற மலையில் வெளியிலிருந்து வந்த இஸ்லாமிய அமைப்பினர் அராஜகம் செய்துள்ளதாக தெரிவித்தார்.
"திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு சொந்தம் எனும் ஆவணங்களை அரசு வெளியிடாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், எஸ்.டி.பி.ஐ கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்,
டங்ஸ்டன் ரத்துக்கு நான் தான் காரணம் என முதலமைச்சர் முந்திக் கொண்டு பாராட்டு விழா நடத்திக்கொள்வது நாடகம் என்றும் அவர் விமர்சித்தார்.
பிப்ரவரி 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் இந்து மக்கள் கட்சி சார்பாக இந்து ஒற்றுமை மாநாடு நடைபெற உள்ளதாகவும் கூறினார்.
"சிறுமியின் வாழ்க்கையை மோசமாக சித்தரிக்கும் 'பேட் கேர்ள்' திரைப்படத்திற்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்றும், வெற்றிமாறன், பா.ரஞ்சித் போன்ற இயக்குநர்களை கைது செய்து பொடா சட்டத்தில் அடைக்க வேண்டும் வேண்டும் என்றும் அவர் கூறினார்.